சிவசேனா அதிருப்தி அணியில் இருந்து மராட்டியம் திரும்பிய எம்.எல்.ஏ. வேண்டுமென்றே தன்னை ஆஸ்பத்திரியில் சேர்த்ததாக குற்றச்சாட்டு


சிவசேனா அதிருப்தி அணியில் இருந்து மராட்டியம் திரும்பிய எம்.எல்.ஏ. வேண்டுமென்றே தன்னை ஆஸ்பத்திரியில் சேர்த்ததாக குற்றச்சாட்டு
x

நிதின் தேஷ்முக் எம்.எல்.ஏ. நேற்று திடீரென விமானம் மூலம் மராட்டியம் திரும்பினார்.

மும்பை,

சிவசேனா அதிருப்தி அணி எம்.எல்.ஏ.க்களுடன் குஜராத் மாநிலம் சூரத் ஓட்டலுக்கு சென்றிருந்தவர் நிதின் தேஷ்முக். அகோலா மாவட்டம் பாலப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வான இவர் கடந்த திங்கட்கிழமை முதல் திடீரென மாயமானதாக அவரது மனைவி போலீசில் புகார் அளித்து இருந்தார். மாரடைப்பு காரணமாக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்தநிலையில் நிதின் தேஷ்முக் எம்.எல்.ஏ. நேற்று திடீரென விமானம் மூலம் மராட்டியம் திரும்பினார்.நாக்பூர் விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், "எனக்கு உடல்நல பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. நான் நன்றாக இருக்கிறேன். ஆனால் மாரடைப்பு ஏற்பட்டதாக கூறி 20 முதல் 25 பேர் சேர்ந்து என்னை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். எனக்கு அங்கு வலுக்கட்டாயமாக ஊசி போடப்பட்டது. எப்படியோ அவர்களிடம் இருந்து தப்பித்து வந்துவிட்டேன். நான் உத்தவ் தாக்கரேயின் உண்மையான விசுவாசி" என்றார்.


Next Story