ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக நியமிக்க வேண்டும்- மராட்டிய மாநில காங்கிரஸ் தீர்மானம்


ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக நியமிக்க வேண்டும்- மராட்டிய மாநில காங்கிரஸ் தீர்மானம்
x

Image Courtesy: PTI 

மராட்டியம் மாநில காங்கிரஸ் கமிட்டி, கட்சியின் தேசியத் தலைவராக ராகுல் காந்தியை நியமிப்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளது.

மும்பை,

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 24-ந் தேதி தொடங்குகிறது. ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக மீண்டும் நியமிக்கக்கோரி பல்வேறு மாநிலங்கள் மாநில காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றனர்.

ராஜஸ்தான், சத்தீஸ்கர் குஜராத் மாநிலங்களைத் தொடர்ந்து, காங்கிரஸின் தமிழ்நாடு மற்றும் பீகார் பிரிவுகள் ராகுல் காந்தி மீண்டும் கட்சியின் தலைவராக வர வேண்டும் என்று இன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. இன்று நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

இந்த மாநிலங்களை தொடர்ந்து தற்போது மராட்டிய மாநில காங்கிரஸ் கமிட்டி (எம்பிசிசி) கட்சியின் தேசியத் தலைவராக ராகுல் காந்தியை நியமிப்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளது. தெற்கு மும்பையில் உள்ள ஒய்.பி.சவான் மையத்தில் நடைபெற்ற மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மராட்டிய மாநில முன்னாள் முதல் மந்திரி அசோக் சவான் இந்த தீர்மானத்தை முன்மொழிந்தார். நசீம் கான் மற்றும் சந்திரகாந்த் ஹண்டோர் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தனர். இதை தொடர்ந்து இந்த தீர்மானம் மாநில காங்கிரஸ் கமிட்டியில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.


Next Story