மராட்டியத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 6,493 பேருக்கு தொற்று
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,493 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதுதொடர்பாக மராட்டிய மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், இன்று புதிதாக 6 ஆயிரத்து 493 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதன்மூலம் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 79 லட்சத்து 62 ஆயிரத்து 666 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு இன்று 5 பேர் பலியாகினர். இதன்மூலம் மாநிலத்தில் இதுவரை தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 905 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 6,213 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 77 லட்சத்து 90 ஆயிரத்து 153 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 24 ஆயிரத்து 608 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story