அதிகரிக்கும் கொரோனா... மக்கள் முகக்கவசம் அணியவேண்டும்: மராட்டிய சுகாதார மந்திரி அறிவுறுத்தல்
கொரோனா அதிகரிப்பதால், மக்கள் முகக்கவசம் அணிந்துகொள்ளவேண்டுமென மராட்டிய சுகாதார மந்திரி அறிவுறுத்தியுள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருவதாக அம்மாநில சுகாதார மந்திரி தெரிவித்தார். இது குறித்து அவர் கூறும்போது,
அரசாங்கம் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை இன்னும் கட்டாயப்படுத்தவில்லை. இருந்தாலும் மக்கள் முகக்கவசம் அணிவதை தவிர்க்காமல் கட்டாயம் அணிந்துகொள்ளவேண்டும்.ளைக் கேட்டுக்கொள்கிறேன்.
கொரோனா நடவடிக்கைகளில் மாநில அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது. மாநிலத்தில் பாதிக்கப்பட்ட நபர்களின் ஒரு எண்ணிக்கை 1,494 ஆக உயர்ந்துள்ளது. இது ஒரு வாரத்தில் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. ஒரு கொரோனா மரணம் ஞாயிற்றுக்கிழமை பதிவாகியுள்ளது. ஆனால், இறப்பு விகிதம் உயரவில்லை
கொரோனா தொற்றின் நான்காவது அலை உருவாகலாம், ஆனால் மக்கள் இது குறித்து பீதியடைய வேண்டாம். இரண்டாம் தவனை தடுப்பூசி செலுத்தி ஒன்பது மாதங்களை கடந்தவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.