இளம் தொழிலதிபரை பாம்பை விட்டு கடிக்க வைத்து கொலை செய்த காதலி...!


இளம் தொழிலதிபரை பாம்பை விட்டு கடிக்க வைத்து கொலை செய்த காதலி...!
x
தினத்தந்தி 20 July 2023 5:52 PM IST (Updated: 20 July 2023 6:00 PM IST)
t-max-icont-min-icon

இந்த கொலை தொடர்பாக இளம் தொழிலதிபர் அங்கித்தின் காதலி, உதவியாளர்கள், உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஹல்த்வானி,

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த இளம் தொழிலதிபர் அங்கித் சவுகான்(28) என்பவர் கடந்த 17-ந்தேதி ஹல்த்வானி பகுதியில் தனது காருக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில் அங்கித் சவுகானின் காலில் பாம்பு கடித்த காயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பாம்பை வைத்து தொழில் அதிபரை கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகின.இதைத் தொடர்ந்து பாம்பாட்டியை போலீசார் கைது செய்தனர்.

இந்த கொலை தொடர்பாக அங்கித்தின் காதலி, உதவியாளர்கள், உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த கொலை குறித்து நைனிடால் போலீஸ் சூப்பிரண்டு பங்கஜ் பட் கூறியதாவது:-

டோலி என்று அழைக்கப்படும் மஹி(22) என்ற இளம் பெண்ணை அங்கித் சவுகான் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார். அங்கித்திடம் இருந்து மஹி அதிக அளவு பணம் வாங்கி உள்ளார். ஆனால் காதல் பெயரை சொல்லி மஹி டிமிக்கி கொடுத்து வந்தார். ஆனால் அங்கித் தொடர்ந்து பணம் தொடர்பாக பேசி வந்து உள்ளார்.

இதனால் அங்கித்தை கொலை செய்யத் திட்டமிட்டு உள்ளார். அதன்படி போஜிபுராவில் வசிக்கும் சப்பரே ரமேஷ் நாத் என்ற பாம்பாட்டியை தொடர்பு கொண்டு உள்ளார்.

ரமேஷ் நாத்தை ஜூலை 14 அன்று ஹல்த்வானிக்கு வரவழைத்தார் மஹி.

மேலும் வேலைக்காரரான ராமாவதாரம் மற்றும் அவரின் மனைவி ஆகிய இருவரும் மஹியின் வீட்டிற்கு வந்தனர். இவர்கள் அனைவரும் வீட்டிற்குள் பதுங்கி இருந்து உள்ளனர்

அன்று மாலை 6 மணிக்கு அங்கித் தன் காரில் மஹியின் வீட்டிற்கு வந்து உள்ளார். மஹி அங்கித்தை மது குடிக்க வைத்து உள்ளார். அவர் மயக்கத்தில் இருந்தபோது, குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் அங்கித்தின் கைகளையும் கால்களையும் பிடித்து கொண்டனர்.

பாம்பாட்டி அவரின் இரண்டு கால்களிலும் பாம்பை கடிக்க வைத்துள்ளார். இதில் அங்கித் உயிரிழந்ததும் குற்றவாளிகள் அவரின் உடலை காரில் வைத்து பூஜியாகாட் அருகே அதை நிறுத்தி விட்டு தப்பிச் சென்றனர். தற்போது போலீசார் தலைமறைவான 4 பேரை தேடிவருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story