சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி சீரமைப்பு பணிகள்


சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி சீரமைப்பு பணிகள்
x
தினத்தந்தி 29 Oct 2022 12:15 AM IST (Updated: 29 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

பெங்களூரு:


பெங்களூருவில் வருகிற 2-ந் தேதி சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அரசு தீவிரமாக செய்து வருகிறது. இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள சாலைகளை சீரமைக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக பெங்களூருவில் உள்ள சாலைகள் சீரமைக்கப்பட்டு, சுரங்கப்பாதை சுவர்கள் வர்ணம் பூசும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கில் பெங்களூருவில் உள்கட்டமைப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் இந்த சீரமைப்பு பணிகளுக்கு பெங்களூருவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மக்களுக்காக, அரசு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளாமல் உள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.


Next Story