பீகார் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை
மக்களவை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை நடத்தி வருகிறார்.
புதுடெல்லி,
2024 மக்களவை தேர்தலை எதிர்கொள்வதற்காக எதிர்கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பல்வேறு மாநில காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். முன்னதாக இன்று ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து பிகார் மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை நடத்தினார். தலைநகர் டெல்லியில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எதிர்வரும் மக்களவை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
Related Tags :
Next Story