மத்திய அரசின் உள்துறை மந்திரிகள் மாநாடு: மம்தா பானர்ஜி புறக்கணிக்க முடிவு என தகவல்


மத்திய அரசின் உள்துறை மந்திரிகள் மாநாடு: மம்தா பானர்ஜி புறக்கணிக்க முடிவு என தகவல்
x

மேற்கு வங்கத்தில் உள்துறை பொறுப்பையும் தன்வசம் வைத்திருக்கும் மம்தா பானர்ஜி இந்த மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என்று அம்மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொல்கத்தா,

அரியானா மாநிலம் சூரஜ்குண்டில் மாநில உள்துறை மந்திரிகள் மற்றும் போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாடு இன்றும், நாளையும் நடக்கிறது. சிந்தனை அமர்வு என்ற பெயரில் இம்மாநாடு நடக்கிறது. இதில், மாநில உள்துறை செயலாளர்கள் மற்றும் மத்திய போலீஸ் படைகள், மத்திய போலீஸ் அமைப்புகள் ஆகியவற்றின் தலைமை இயக்குனர்களும் கலந்து கொள்கிறார்கள். மாநாட்டில், நாளை (வெள்ளிக்கிழமை) பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்று பேசுகிறார்.

போலீஸ்படை நவீனமயம் போலீஸ்படைகளை நவீனப்படுத்துதல், இணைய குற்றங்கள், குற்றவியல் நீதிமுறையில் தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரித்தல், நில எல்லை நிர்வாகம், கடலோர பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பிரச்சினைகள் பற்றியும் விவாதிக்கப்படுகிறது.

இந்த மாநாட்டில், மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. உள்துறை பொறுப்பையும் தன்வசம் வைத்திருக்கும் மம்தா பானர்ஜி இந்த மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என்று அம்மாநில உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல், உள்துறை செயலர் பி பி கோபாலிகா மற்றும் டிஜிபி ஆகிய உயர் அதிகாரிகளும் பங்கேற்க மாட்டார்கள் என்றும் அதற்கு பதிலாக கூடுதல் டிஜிபி நிரஜ்குமார் சிங் பங்கேற்க உள்ளதாகவும் மே.வங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story