மதுபோதையில் பஞ்சாயத்து துணைத்தலைவரை சுட்டுக்கொன்றவரை அடித்து கொன்ற கிராம மக்கள்


மதுபோதையில் பஞ்சாயத்து துணைத்தலைவரை சுட்டுக்கொன்றவரை அடித்து கொன்ற கிராம மக்கள்
x

மதுபோதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பஞ்சாயத்து துணைத்தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பாட்னா,

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டம் பரு என்ற கிராமத்தின் பஞ்சாயத்து துணைத்தலைவர் பங்கஞ் குமார் ஷானி. இவர் அதே கிராமத்தை சேர்ந்த கவுரவ் குமார் என்ற நபருடன் சேர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மது குடித்துள்ளார்.

அப்போது, பங்கஞ் குமாருக்கும் கவுரவுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் மதுபோதையில் இருந்த கவுரவ் தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு பங்கஞ் குமாரை சுட்டுள்ளார்.

இதில், சம்பவ இடத்திலேயே பங்கஞ் குமார் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார். பஞ்சாயத்து துணைத்தலைவர் பங்கஞை சுட்டுக்கொன்ற கவுரவ் அங்கிருந்து தப்பியோட முயற்சித்தார்.

ஆனால், அப்பகுதியில் கூடி இருந்த கிராம மக்கள் தப்பியோட முயன்ற கவுரவை பிடித்து அவரை கடுமையாக தாக்கினர். கிராம மக்கள் கும்பலாக தாக்கியதில் படுகாயமடந்த கவுரவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் கிராமத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த 2 பேரின் உடலையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story