உத்தரபிரதேசத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டவர் கைது
சமூக ஊடகங்களில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கருத்து வெளியிட்டவரை உத்தரபிரதேச போலீசார் கைது செய்தனர்.
லக்னோ,
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே கடந்த 8 நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. இதில் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனா்.
இந்த நிலையில் உத்தரபிரதேசம் மவுதாஹா நகரில் வசிக்கும் அதிப் சவுத்ரி மற்றும் இமாம் மவுலானா சோகைல் அகமது அன்சாரி ஆகியோர் சமூக ஊடகங்களில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கருத்துகளை வெளியிட்டு வந்தனர்.
இதைத்தொடர்ந்து பகைமையை வளர்க்கவும், மத மற்றும் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்டதாக அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இமாம் மவுலானா நேற்று இரவு கைது செய்யப்பட்டார். அதிப் சவுத்ரியை போலீசார் தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story