பிரதமர் அலுவலக அதிகாரி எனக்கூறி காஷ்மீரில் 'இசட் பிளஸ்' பாதுகாப்புடன் சுற்றிய நபர் - குஜராத் கொண்டு செல்லப்பட்டார்
காஷ்மீரில் ‘இசட் பிளஸ்’ உயர் பாதுகாப்புடன் வலம் வந்த குஜராத்தைச் சேர்ந்த கிரண் படேல் கடந்த மாதம் போலீசில் சிக்கினார்.
ஆமதாபாத்,
பிரதமர் அலுவலக உயர் அதிகாரி என்று தன்னை சொல்லிக்கொண்டு காஷ்மீரில் 'இசட் பிளஸ்' உயர் பாதுகாப்பு, குண்டு துளைக்காத கார், நட்சத்திர ஓட்டலில் தங்கல் என வலம் வந்த குஜராத்தைச் சேர்ந்த கிரண் படேல் என்பவர், போலீசில் கடந்த மாதம் வசமாக சிக்கினார்.
அவரைக் கடந்த வியாழக்கிழமை இரவு குஜராத் போலீசார்வசம், காஷ்மீர் போலீசார் ஒப்படைத்தனர். அதன்பின்னர் அவர் நேற்று ஆமதாபாத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்குள்ள குற்றப்பிரிவு போலீஸ் தலைமையகத்துக்கு கொண்டு செல்லப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. கிரண் படேலின் மனைவி மாலினி படேல், முதியவர் ஒருவரின் பங்களாவை அபகரிக்க முயன்ற வழக்கில் சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story