தற்கொலை கடிதம் எழுதவைத்து பெற்ற மகளை தூக்கில் தொங்கவிட்ட 'சைக்கோ' தந்தை


தற்கொலை கடிதம் எழுதவைத்து பெற்ற மகளை தூக்கில் தொங்கவிட்ட சைக்கோ தந்தை
x
தினத்தந்தி 13 Nov 2022 2:56 AM IST (Updated: 13 Nov 2022 3:18 AM IST)
t-max-icont-min-icon

உயிரிழந்த 16 வயது சிறுமி 5 தற்கொலை கடிதங்களை எழுதியுள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் நாக்பூர் மாவட்டம் கலாமா நகரை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 6-ம் தேதி வீட்டில் தூக்கிட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், வீட்டிற்கு விரைந்து வந்து உயிரிழந்த சிறுமியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அந்த சிறுமியின் நடத்தபப்ட்ட விசாரணையில் 5 கடிதங்கள் கைப்பற்றப்பட்டன.

அதில், தற்கொலைக்கு காரணம் வளர்ப்பு தாய், மாமா, அத்தை, தாத்தா, பாட்டி என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதேவேளை, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. தனது உறவினர்களை சிக்க வைக்க சிறுமியின் தந்தையான 40 வயது நபரே தனது மகளை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

அந்த நபரின் செல்போனை ஆய்வு செய்ததில், சிறுமியை தற்கொலை கடிதம் எழுத வைத்தது தெரியவந்துள்ளது. மேலும், சிறுமியை தூக்கில் தொங்கி தற்கொலை செய்தவாறு நாடகமாடும்படி தெரிவித்துள்ளார்.

இதை நம்பி, 5 தற்கொலை கடிதங்களை அந்த சிறுமி எழுதியுள்ளார். பின்னர், பேனில் தூக்கி தற்கொலை செய்வது போன்று நாடகமாக முயற்சித்துள்ளார். இதற்காக நாற்காலியில் நின்றவாறு தூக்கு கயிறில் தலையை விட்டவாறு இருந்துள்ளார்.

அப்போது, சிறுமியின் தந்தை அந்த நாற்காலியை தள்ளிவிட்டுள்ளார். இதனால், சிறுமியின் கழுத்தில் கயிறு இறுகி துடித்துள்ளார். தனது மகளின் தூக்கில் தொங்கி துடித்துக்கொண்டிருந்தபோதும் அந்த கொடூர தந்தை அதை புகைப்படம் எடுத்துள்ளார். தனது மகள் தூக்கில் தொங்கி உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நிலையில் இதை தனது மற்றொரு மகளான 12 வயது சிறுமியை பார்க்கவைத்துள்ளார்.

இந்த தகவலையறிந்த போலீசார், 40 வயதான அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story