டெல்லியில் நூதன திருட்டு: மதுபானங்களை வீட்டிற்கே 'டெலிவரி' செய்வதாக மோசடி செய்தவர் கைது


டெல்லியில் நூதன திருட்டு: மதுபானங்களை வீட்டிற்கே டெலிவரி செய்வதாக மோசடி செய்தவர் கைது
x

டெல்லியில் மதுபானங்களை வீட்டிற்கே ‘டெலிவரி’ செய்வதாக கூறி மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

புதுடெல்லி,

தலைநகரான டெல்லியை ஒட்டிய நகரான குருகிராமில், இணையதள பக்கங்களில் பிரபல மதுபான கடைகளின் பெயர்களில் சில விளம்பரங்கள் வெளியாகின. அதில் வீட்டிற்கே மதுபானங்களை 'டோர் டெலிவரி' செய்வதாக கூறப்பட்டு இருந்தது. இதை நம்பிய மதுப்பிரியர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் அதில் கூறப்பட்டிருந்த தொடர்பு எண்ணுக்கு பணத்தை அனுப்பி, மதுவை கொண்டுவந்து தர 'ஆர்டர்' கொடுத்தனர்.

இது தொடர்பாக ஒருவர் கொடுத்த புகாரில், யூடியூப் வீடியோவுக்கு இடையே காண்பிக்கப்பட்ட விளம்பர எண்ணில் தொடர்பு கொண்டு பார்கோடை ஸ்கேன் செய்தபோது ஓ.டி.பி. கேட்கப்பட்டதாகவும், அதை பகிர்ந்ததும் தனது அக்கவுண்ட்டில் இருந்து ரூ.78 ஆயிரத்து 374 பறிபோனதாகவும் கூறியிருந்தார்.

இதுபோல பல்வேறு செல்போன் எண்கள் கொடுக்கப்பட்டு மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 200க்கும் மேற்பட்டவர்கள் ஏமாந்துள்ளனர். இது தொடர்பாக அசாருதின்கான் என்ற 23 வயது வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் ராஜஸ்தானின் பரத்பூர் பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. அவர் ராஜஸ்தானில் இருந்தபடியே இந்த மோசடியை அரங்கேற்றி உள்ளார்.

மருந்தியல் (பார்மஸி) டிப்ளமோ படிப்பு படித்துள்ள அவர், வேலை தேடி வந்ததாகவும், அதே நேரத்தில் விரைவாக சம்பாதிக்க ஆசைப்பட்டு அதே கிராமத்தை சேர்ந்த பலர், இதுபோன்ற விளம்பர மோசடியில் ஈடுபடுவதை அறிந்து இதில் களமிறங்கியதாகவும் போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.


Next Story