போலீஸ் வேடமிட்டு 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது


போலீஸ் வேடமிட்டு 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது
x
தினத்தந்தி 28 Dec 2022 3:18 AM IST (Updated: 28 Dec 2022 3:19 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் போலீஸ் வேடமிட்டு 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைதுசெய்தனர்.

புதுடெல்லி,

தென்மேற்கு டெல்லியின் சாகர்பூர் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் போலீஸ் அதிகாரி போல் வேடமணிந்த ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறுமியும் அவரது நண்பர்களும் உள்ளூர் தேவாலயத்திற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட 50 வயது நபர், தன்னை ஒரு போலிஸ் அதிகாரி போல் காட்டிக்கொண்டு இரவு 8 மணியளவில் சிறுமி மற்றும் அவரது நண்பர்களை ஒரு பூங்காவிற்கு அழைத்துச் சென்றார்.

அங்கு சிறுமியின் நண்பர்களை அனுப்பிவைத்துவிட்டு, சிறுமியை மட்டும் தனிமையான இடத்திற்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், தனியர் நிறுவனத்தில் வேலை செய்துவரும் குற்றவாளியை போலீசார் கைதுசெய்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story