வேறு பெண்ணுடன் தொடர்பு; கணவரை அரை நிர்வாணத்தில் ஊர்வலமாக இழுத்து சென்ற பெண்


வேறு பெண்ணுடன் தொடர்பு; கணவரை அரை நிர்வாணத்தில் ஊர்வலமாக இழுத்து சென்ற பெண்
x

கணவரையும், அவருடன் தொடர்பில் இருந்த பெண்ணையும் அரை நிர்வாணமாக்கிய அந்த நபரின் மனைவி ஊரின் தெருவில் ஊர்வலமாக இழுத்து சென்றுள்ளார்.

ராய்ப்பூர்,

சத்தீஸ்கர் மாநிலம் கொண்டகன் மாவட்டம் உரிண்டபடா பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த திருமணமான நபர் அதேகிராமத்தை சேர்ந்த வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

இதனிடையே, கடந்த 11-ம் தேதி வேறொரு பெண்ணுடன் தனது கணவர் தனிமையில் இருப்பதை அந்த நபரின் மனைவி பார்த்துள்ளார். இதையடுத்து, தனது உறவினர்களை அழைத்த அந்த பெண் தனது கணவனையும், அவருடன் தனிமையில் இருந்த பெண்ணையும் கையும் கழவுமாக பிடித்துள்ளார்.

பின்னர், இருவரையும் சரமாரியாக தாக்கிய அந்த பெண், தனது கணவரையும் அவருடன் தனிமையில் இருந்த பெண்ணையும் அரை நிர்வாணமாக்கி கிராமத்தின் தெருக்களில் ஊர்வலமாக இழுத்து சென்றுள்ளார்.

இது தொடர்பாக ஆண் நபரும், அந்த பெண்ணும் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதையடுத்து, தனது கணவனையும், அவருடன் தனிமையில் இருந்த பெண்ணையும் அரைநிர்வாணமாக தெருக்களில் ஊர்வலமாக இழுந்து வந்த அந்த நபரின் மனைவி மற்றும் உறவினர்கள் என 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story