மங்களூரு புதிய துறைமுகத்துக்கு மொரீசியஸ் நாட்டு பிரமாண்ட சொகுசு கப்பல் வருகை


மங்களூரு புதிய துறைமுகத்துக்கு  மொரீசியஸ் நாட்டு பிரமாண்ட சொகுசு கப்பல் வருகை
x
தினத்தந்தி 5 May 2023 12:15 AM IST (Updated: 5 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மங்களூரு புதிய துறைமுகத்துக்கு மொரீசியஸ் நாட்டு பிரமாண்ட சொகுசு கப்பல் வந்தது.

மங்களூரு-

மங்களூரு புதிய துறைமுகத்துக்கு மொரீசியஸ் நாட்டு பிரமாண்ட சொகுசு கப்பல் வந்தது.

பிரமாண்ட கப்பல்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் உள்ள மங்களூரு புதிய துறைமுகத்திற்கு 'இன்சிக்னியா' என்ற பெயரில் மொரீசியஸ் நாட்டு பிரமாண்ட பயணிகள் சொகுசு கப்பல் வந்தது. அந்த கப்பல் மும்பை வழியாக நேற்றுமுன்தினம் காலை மங்களூரு புதிய துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பலில் தியேட்டர், மதுபான விடுதி, நீச்சல் குளம் உள்பட பல்வேறு சொகுசு வசதிகள் உள்ளன. இந்த கப்பலில் 466 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் 399 ஊழியர்களும் வந்திருந்தனர்.

கப்பலில் வந்த சுற்றுலா பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் மங்களூரு, உடுப்பி பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சிறப்பு பஸ்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

கொச்சிக்கு...

சுற்றுலா பயணிகள் பல்வேறு சுற்றுலாத்தலங்கள், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், கோவில்கள், பிரசித்திபெற்ற தேவாலயங்கள், வணிக வளாகங்கள், முந்திரி தொழிற்சாலை உள்ளிட்டவற்றை சுற்றிப்பார்த்தனர். பின்னர் மாலையில் அவர்கள் கப்பலுக்கு திரும்பினர். அதையடுத்து அந்த சொகுசு கப்பல் கேரள மாநிலம் கொச்சிக்கு புறப்பட்டு சென்றது.


Next Story