மங்களுரூ குண்டு வெடிப்பு; ஷாரிக்கிடம் விசாரணை நடத்த இன்னும் ஒருவாரம் ஆகலாம்?


மங்களுரூ குண்டு வெடிப்பு; ஷாரிக்கிடம் விசாரணை நடத்த இன்னும் ஒருவாரம் ஆகலாம்?
x

தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதால் ஷாரிக்கிடம் விசாரணை நடத்த முடியவில்லை என்று மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

மங்களூரு ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்த சம்பவத்தில் 45 சதவீத தீக்காயம் அடைந்த பயங்கரவாதி ஷாரிக், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 8 டாக்டர்கள் கொண்ட குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். குண்டுவெடிப்பில் ஷாரிக்கின் கை, கால் விரல்கள் சிதைந்துள்ளதாலும், முகம், தாடை, முதுகு ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாலும் அவரிடம் விசாரணை நடத்த முடியாமல் போலீசாரும், என்.ஐ.ஏ. அதிகாரிகளும் தவித்து வருகிறார்கள்.

மேலும் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது. அவரது வயிற்றில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதால், நுரையீரலில் தொற்று ஏற்பட்டு உள்ளதாகவும், அதற்காக அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் ஒரு வாரத்தில் அவர் குணமாகலாம் என்றும் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற போலீசாரும், என்.ஐ.ஏ. அதிகாரிகளும் திட்டமிட்டுள்ளனர். மேலும் ஷாரிக் குணமடைந்தாலும் அதிகாரிகளின் கேள்விகளுக்கு போதுமான பதில் அளிப்பாரா என்பது சந்தேகம் தான் என்று போலீசார் கருதுகிறார்கள்.


Next Story