மணிப்பூரில் நிலச்சரிவு: 7 பேர் பலி; பலர் மாயம் என தகவல்


மணிப்பூரில் நிலச்சரிவு: 7 பேர் பலி; பலர் மாயம் என தகவல்
x
தினத்தந்தி 30 Jun 2022 2:20 PM IST (Updated: 30 Jun 2022 2:21 PM IST)
t-max-icont-min-icon

மணிப்பூரில் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.

நோனி,

மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தின் துபூல் ரெயில் நிலையம் அருகே கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ராணுவ வீரர்கள் மூலம் 13 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன பிராந்திய ராணுவ வீரர்கள் 55 பேர் மற்றும் தொழிலாளர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்பு பணியில் ராணுவம், அசாம் ரைபிள்ஸ் குழு ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவால் பாறைகள் சரிந்து ஆற்றின் குறுக்கே விழுந்ததால் ஏராளமானோர் புதையுண்டு இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story