மணிப்பூரில் பாஜக நிர்வாகி வீடு மீது தாக்குதல்
மணிப்பூரில் பாஜக நிர்வாகி வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இம்பால்,
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மாநிலத்தில் இரு பிரிவினரிடையே நிகழ்ந்த மோதல் சம்பவம் நாட்டையே உலுக்கியது. இருப்பினும் இப்பிரச்னை நீரு பூத்த நெருப்பாக இருந்து வருகிறது. இந்நிலையில் மர்ம நபர்கள் பாஜக செய்தி தொடர்பாளர் வீடு மற்றும் கார் மீது தாக்குதல் நடத்தினர்
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கும் படி சுராந்தபூர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் தருண் குமார் மாவட்ட எஸ்.பிக்கு கடிதம் எழுதி உள்ளார்.மேலும் இச்சம்பவம் குறித்து மாநில முதல்வர் பிரேன்சிங் கூறுகையில், இத்தகைய ஆத்திரமூட்டும் செயல்கள் அனுமதிக்கப்படாது. அச்சுறுத்தல் குறித்து முன்கூட்டியே எச்சரித்த போதும் போதிய பாதுகாப்பு வழங்க தவறிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story