லட்சுமி சாகர் கிராமத்தில் மந்திரி போசராஜு ஆய்வு


லட்சுமி சாகர் கிராமத்தில் மந்திரி போசராஜு ஆய்வு
x
தினத்தந்தி 21 Sept 2023 12:15 AM IST (Updated: 21 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட லட்சுமி சாகர் கிராமத்தில் மந்திரி போசராஜு நோில் சென்று ஆய்வு செய்தாா்.

கோலார் தங்கவயல்

வறட்சி மாவட்டமான கோலார் மாவட்டத்தில் விவசாயம், நிலத்தடி நீர் அதிகரிக்க பெங்களூருவில் கழிவுநீரை சேகரித்து திட்டமிடப்பட்டது. இதற்காக ராட்சத எந்திரங்களை கொண்டு சுத்தம் செய்து கே.சி. வேலி கூட்டுக்கூடி நீர் திட்டத்தின் கீழ் கோலார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஏரிகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி 2 கடந்த நாட்களுக்கு முன்பு கோலார் தாலுகா லட்சுமி சாகர் கிராமத்தில் உள்ள ஏரியில் தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் கழிவு நீருடன் தண்ணீர் கலந்து கிராமத்தை வெள்ளம் சூழ்ந்தது.

இதனால், மக்கள் பெரிதும் அவதி அடைந்தனர். அவர்கள் வீட்டை வெளியே செல்ல முடியாமல் பரிதவித்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தண்ணீரை வெளியேற்றும்படி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அ

தன்பேரில் மந்திரி போசராஜு நேற்று அரசு அதிகாரிகளுடன் லட்சுமி சாகர் கிராமத்திற்கு வந்தார். அ

வர் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை ஆய்வு செய்தார். பின்னர் வெள்ள நீரை அகற்ற உத்தரவிட்டார். மேலும் கிராம மக்களுக்கு தேவையான செய்து கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு மந்திரி போசராஜு உத்தரவிட்டார்.


Next Story