ராணுவத்திற்கான உதிரிபாகங்கள் தயரிப்பு : 3வது உள்நாட்டு உற்பத்தி பட்டியலுக்கு ராஜ்நாத் சிங் ஒப்புதல்


ராணுவத்திற்கான உதிரிபாகங்கள் தயரிப்பு : 3வது உள்நாட்டு உற்பத்தி பட்டியலுக்கு ராஜ்நாத் சிங் ஒப்புதல்
x

மூன்றாவது நேர்மறை உள்நாட்டு உற்பத்தி பட்டியலுக்கான முன்மொழிகளுக்கு மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

புதுடெல்லி,

பாதுகாப்பு உற்பத்தியில் இந்தியத் தொழில்துறை அதிக பங்களிப்பை அளிக்கும் அடிப்படையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ விகாரங்கள் துறையில் 780 பொருட்களின் மூன்றாவது நேர்மறை உள்நாட்டு உற்பத்தி பட்டியலுக்கான முன்மொழிகளுக்கு மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

டிசம்பர் 2023 முதல் டிசம்பர் 2028 வரையிலான காலக்கட்டத்தில், இந்த பொருட்களின் இறக்குமதி தடைக்கான குறிப்பிட்ட காலக்கெடுவை பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து 3வது பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் சுமார் ஆறு வருட காலக் கெடுவின் கீழ் இந்திய தொழில்துறையினரிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும். டிசம்பர் 2021 மற்றும் மார்ச் 2022-இல் வெளியிடப்பட்ட இரண்டு உள்நாட்டு உற்பத்தி பட்டியல்களின் தொடர்ச்சியாக தற்போது இந்த 3வது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


Next Story