ஒடிசாவில் மாவோயிஸ்டு தாக்குதல்; பலியான 3 வீரர்களுக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு அறிவிப்பு
ஒடிசாவில் மாவோயிஸ்டு தாக்குதலில் பலியான 3 சி.ஆர்.பி.எப். வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டு உள்ளது.
புவனேஸ்வர்,
ஒடிசாவின் நுவபடா மாவட்டத்தில் சாலை திறப்பு நிகழ்ச்சி ஒன்றிற்காக இன்று மதியம் வந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) வீரர்கள் மீது மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த 3 வீரர்கள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், 3 பேரும் உயிரிழந்து விட்டனர். அவர்கள் உதவி காவல் ஆய்வாளர் சிசு பால் சிங், ஏ.எஸ்.ஐ. ஷிவ் லால் மற்றும் கான்ஸ்டபின் தர்மேந்திர குமார் சிங் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.
இந்த மாவோயிஸ்டு தாக்குதலில் பலியான 3 சி.ஆர்.பி.எப். வீரர்களின் குடும்பத்தினருக்கு ஒடிசா அரசு இழப்பீடு அறிவித்து உள்ளது. இதன்படி, தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஒடிசா டி.ஜி.பி. ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளார். மாவோயிஸ்டுகளை கண்டறியும் பணி அந்த பகுதியில் தொடர்ந்து நடைபெறும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.