மராட்டியம்; கர்ப்பம் தரிக்க முடியாத மனைவியை கோபத்தில் கொலை செய்த கணவன் கைது
மராட்டியத்தில் கர்ப்பம் தரிக்க முடியாத மனைவியை கோபத்தில் கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டு உள்ளார்.
மும்பை,
மராட்டியத்தின் தானே மாவட்டத்தில் ஆம்பர்நாத் பகுதியில் தொழிற்சாலை காலனி பகுதியில் கணவன், மனைவி வசித்து வந்து உள்ளனர். இவர்களுக்கு குழந்தை இல்லை என கூறப்படுகிறது.
இதில், அந்த பெண் கர்ப்பம் தரிக்காமல் இருப்பது பற்றி கணவர் ரோனித்ராஜ் மண்டல் (வயது 37) மற்றும் அவரது மனைவிக்கும் இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது.
இதேபோன்று, நேற்றும் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில், மோதல் முற்றியதில், கணவர் ஆயுதம் ஒன்றை கொண்டு, மனைவியை கடுமையாக தாக்கி உள்ளார்.
இதில், சம்பவ இடத்திலேயே அவரது மனைவி உயிரிழந்து உள்ளார். இதுபற்றி ஆலையின் தொழிலாளர் யூனியனின் பிரதிநிதி ஒருவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.
உடனடியாக ஆம்பர்நாத் போலீசார் விரைந்து வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கணவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.