"இந்த நாள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரட்டும்": பிரதமர் மோடி பக்ரீத் வாழ்த்து

இந்த நாள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரட்டும்: பிரதமர் மோடி பக்ரீத் வாழ்த்து
x

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஈகை திருநாளான பக்ரீத் இஸ்லாமியர்களால் இன்று (வியாழக்கிழமை) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகைக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டுவீட்டரில் அவர் கூறியுள்ள வாழ்த்துச்செய்தியில்;

"ஈத் பண்டிகை நல்வாழ்த்துக்கள். இந்த நாள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரட்டும். மேலும், இது நமது சமூகத்தில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வை நிலைநிறுத்தட்டும்"

"ஈத் பண்டிகை நல்வாழ்த்துக்கள். இந்த நாள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரட்டும். மேலும், இது நமது சமூகத்தில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வை நிலைநிறுத்தட்டும்"

இவ்வாறு பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story