அம்பேத்கர் பற்றி அவதூறாக பேசிய மருத்துவக்கல்லூரி டீன் முற்றுகை


அம்பேத்கர் பற்றி அவதூறாக பேசிய மருத்துவக்கல்லூரி டீன் முற்றுகை
x

சாம்ராஜ்நகரில் சட்டமேதை அம்பேத்கர் பற்றி அவதூறாக பேசிய மருத்துவக்கல்லூரி டீனை முற்றுகையிட்டு தலித் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொள்ளேகால்:-

மருத்துவக்கல்லூரி டீன்

சாம்ராஜ்நகர் மாவட்ட மருத்துவக்கல்லூரி டீனாக இருந்து வருபவர் சஞ்சீவ்குமார். இவர் சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கர் குறித்தும், அவர் இயற்றிய சட்டங்கள் குறித்தும் அவமானப்படுத்தும் வகையில் பேசி

உள்ளார். இதுதொடர்பாக வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று மருத்துவக்கல்லூரி முன்பு திரண்ட பகுஜன் சமாஜ் கட்சியினர் மற்றும் தலித் அமைப்பினர் டீன் சஞ்சீவ்குமாரின் காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி அறிந்த போலீசார் விரைந்து வந்து சஞ்சீவ் குமாரை மீட்டனர். மேலும் போராட்டக்காரர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்டினர். அதையடுத்து அவர்கள் டீன் சஞ்சீவ் குமாரை முற்றுகையிட்டு அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி ஆவேசமாக கோஷமிட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

போராட்டம் தொடரும்

அதையடுத்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். பின்னர் அவர்கள் டீன் சஞ்சீவ்குமாரை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். டீன் சஞ்சீவ் குமார் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அதுவரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் தலித் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.


Next Story