கே.ஆர்.புரம்-பையப்பனஹள்ளி இடையே மெட்ரோ ரெயில் பணிகள் முடிவடையும்


கே.ஆர்.புரம்-பையப்பனஹள்ளி இடையே மெட்ரோ ரெயில் பணிகள் முடிவடையும்
x

ஜூலை மாதத்திற்குள் கே.ஆர்.புரம்-பையப்பனஹள்ளி இடையே மெட்ரோ ரெயில் பணிகள் முடிவடையும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு:-

பெங்களூருவில் சாலை போக்குவரத்தை குறைக்கவும், குறித்த நேரத்தில் பொது மக்கள் செல்வதற்கும் வசதியாக மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. கெங்கேரி முதல் பையப்பனஹள்ளி வரை மெட்ரோ ரெயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த வழித்தடத்தில் கே.ஆர்.புரம்-ஒயில்பீல்டு இடையே புதிதாக மெட்ரோ பாதை அமைக்கப்பட்டது. தற்போது அந்த வழித்தடத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் கே.ஆர்.புரம்-பையப்பனஹள்ளி இடையே மெட்ரோ பாதை அமைக்கும் பணி கிடப்பில் இருந்தது. பொதுமக்களின் தொடர் கோரிக்கையை ஏற்று தற்போது அந்த பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கே.ஆர்.புரம்-பையப்பனஹள்ளி இடையே நடைபெறும் பணிகள் ஜூலை மாத இறுதிக்குள் நிறைவடையும் எனவும், அதனை தொடர்ந்து ரெயில்கள் இயக்கப்படும் எனவும் மெட்ரோ நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், 'பெங்களூருவில் மெட்ரோ வழித்தடங்களை அதிகரிக்கும் பணிகள் முனைப்புடன் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கே.ஆர்.புரம்-பையப்பனஹள்ளி இடையே முழுவீச்சில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில், அந்த பணிகள் ஜூலை மாத இறுதிக்குள் முடிக்கப்படும்' என்றனர்.


Next Story