டெல்லியில் 120 கி.மீ. வேகத்தில் இன்று முதல் மெட்ரோ ரெயில் இயக்கம்..!!


டெல்லியில் 120 கி.மீ. வேகத்தில் இன்று முதல் மெட்ரோ ரெயில் இயக்கம்..!!
x

கோப்புப்படம் 

டெல்லியில் 120 கி.மீ. வேகத்தில் மெட்ரோ ரெயில் இன்று முதல் இயக்கப்படுகிறது.

புதுடெல்லி,

டெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 120 கி.மீ. வேகத்தில் மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது. இது நாட்டிலேயே மெட்ரோ ரெயிலின் அதிகபட்ச வேகமாகும். டெல்லியில் விமான நிலைய வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் இந்த வேகத்தில் இயக்கப்படும்.

தங்கள் நிறுவன என்ஜினீயர்களின் மிகக் கவனமான திட்டமிடல் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளின் ஒத்துழைப்பால் இது சாத்தியமாகி உள்ளது என டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Next Story