போலீசார் அடித்து துன்புறுத்துவதாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் புகார்


போலீசார் அடித்து துன்புறுத்துவதாக  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் புகார்
x

போலீசார் அடித்து துன்புறுத்துவதாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் புகார் அளித்துள்ளனர்

பெங்களூரு: பெங்களூரு ஹெப்பகோடி அருகே ஆனேக்கல் ரோட்டில் சாய்பாபா காலனியில் ஏராளமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குடிசை அமைத்து தங்கி உள்ளனர். இந்த நிலையில் அந்த காலனிக்குள் புகுந்த ஹெப்பகோடி போலீசார் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வங்காளதேசத்தில் இருந்து தப்பி வந்தவர்கள் என்று கூறி அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. மேலும் 24 மணி நேரத்திற்குள் குடிசைகளை காலி செய்ய வேண்டும் என்று கெடு விதித்ததுடன், தொழிலாளர்களிடம் இருந்து பணத்தை பறித்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தங்களை அடித்து துன்புறுத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி பெங்களூருவில் உள்ள கர்நாடக மனித உரிமைகள் ஆணையத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் புகார் மனு அளித்து உள்ளனர். ஆனால் தொழிலாளர்களின் குற்றச்சாட்டை உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் மறுத்து உள்ளார். அந்த காலனியில் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் தங்கி உள்ளார்களா? என்று மட்டும் தான் போலீசார் ஆய்வு செய்தனர் என்றும், தொழிலாளர்களை அடிக்கவில்லை என்றும், அவர்களிடம் பணம் பறிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.


Next Story