போலீஸ் குடியிருப்பில் மந்திரி அரக ஞானேந்திரா ஆய்வு


போலீஸ் குடியிருப்பில் மந்திரி அரக ஞானேந்திரா ஆய்வு
x
தினத்தந்தி 15 Oct 2022 12:15 AM IST (Updated: 15 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு போலீஸ் குடியிருப்பில் மந்திரி அரக ஞானேந்திரா ஆய்வு செய்தார்.

பெங்களூரு:

பெங்களூரு பின்னிமில் அருகே போலீஸ்காரர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. கடந்த ஆண்டு (2021) அந்த குடியிருப்பில் விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக ஒரு பகுதியில் வசித்த 60 போலீஸ்காரர்களின் குடும்பத்தினர் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டனர். இருப்பினும் மற்ற குடியிருப்புகளில் போலீஸ்காரர்களின் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.இந்த நிலையில், பின்னிமில் அருகே உள்ள போலீஸ் குடியிருப்புக்கு, மந்திரி அரக ஞானேந்திரா சென்று ஆய்வு நடத்தினார். அவருடன், மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட், போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டியும் சென்றிருந்தார்கள்.

குடியிருப்பில் விரிசல் உண்டான பகுதியை ஆய்வு செய்த மந்திரி அரக ஞானேந்திரா, விரிசல் ஏற்படுவதற்கான காரணம், சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்திடம் தகவல்களை பெற்று தன்னிடம் வழங்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அத்துடன் குடியிருப்பில் வசிக்குகம் போலீஸ்காரர்களின் குடும்பத்தினர்களிடம் குறைகளை கேட்டும் அறிந்து கொண்டார். அப்போது குடியிருப்பில் வசிப்பவர்கள் அடிப்படை வசதிகள் இல்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து, குடியிருப்பில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக மந்திரி அரக ஞானேந்திரா உறுதி அளித்தார்.


Next Story