மந்திரி அரக ஞானேந்திரா காலில் விழுந்தவர்களால் பரபரப்பு


மந்திரி அரக ஞானேந்திரா காலில் விழுந்தவர்களால் பரபரப்பு
x

போலீஸ் பணிக்கு வயது வரம்பை உயர்த்தகோரி மந்திரி அரக ஞானேந்திரா காலில் விழுந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரு:

துமகூரு டவுனில் உள்ள அரசு பள்ளியில் நேற்று கன்னட ராஜ்யோத்சவா விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கர்நாடக போலீஸ் மந்திரியும், துமகூரு மாவட்ட பொறுப்பு மந்திரியுமான அரக ஞானேந்திரா கலந்து கொண்டார். அப்போது அந்த விழாவுக்கு வந்திருந்த சிலர் திடீரென மந்திரி அரக ஞானேந்திராவின் காலில் விழுந்து கதறி அழுதனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அரக ஞானேந்திரா அவர்களை சமாதானம் செய்தார். அப்போது மந்திரியின் காலில் விழுந்தவர்கள் போலீஸ் பணிக்கு சேருவதற்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனை அரக ஞானேந்திராவும் ஏற்றுக்கொண்டார். முன்னதாக மேடையின் முன்பு நின்று கொண்டு வயது வரம்பை உயர்த்த கோரி சிலர் கோஷம் எழுப்பினர். அவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி விரட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story