பிரகலாத் ஜோஷியுடன் மந்திரி கோட்டா சீனிவாச பூஜாரி சந்திப்பு
மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷியுடன் மந்திரி கோட்டா சீனிவாச பூஜாரி சந்தித்து பேசினார்.
உப்பள்ளி:-
மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷியை நேற்று முன்தினம் இரவு உப்பள்ளி கேஷ்வாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை மந்திரி கோட்டா சீனிவாச பூஜாரி நேரில் சந்தித்து பேசினார். அப்போது மத்திய பிரகலாத் ஜோஷி, தார்வாரில் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 100 பேர் தங்கும் வகையில் விடுதி கட்ட வேண்டும், தார்வாரில் அம்பேத்கர், பாபு ஜெகஜீவன்ராம் ஆகியோருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு மந்திரி கோட்டா சீனிவாச பூஜாரியும் சம்மதம் தெரிவித்தார். இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும், தார்வாரில் அம்பேத்கர், பாபு ஜெகஜீவன்ராம் மணிமண்டபம் கட்டவும், வழிபாட்டு தலங்கள் மேம்பாட்டுக்கும் தனது எம்.பி. நிதியில் இருந்து ரூ.5 கோடியை மந்திரி கோட்டா சீனிவாச பூஜாரியிடம் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கொடுத்தார்.