சிக்கமகளூருவில் உள்விளையாட்டு அரங்கு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; மந்திரி நாராயணகவுடா உத்தரவு


சிக்கமகளூருவில் உள்விளையாட்டு அரங்கு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; மந்திரி நாராயணகவுடா உத்தரவு
x
தினத்தந்தி 19 Dec 2022 12:15 AM IST (Updated: 19 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

சிக்கமகளூருவில் உள்விளையாட்டு அரங்கு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மந்திரி நாராயணகவுடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சிக்கமகளூரு:

சிக்கமகளூரு கல்யாண்நகர் பகுதியில் உள்விளையாட்டு அரங்கு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை நேற்று விளையாட்டு துறை மந்திரி நாராயணகவுடா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.7½ கோடி சிக்கமகளூருவில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த உள்விளையாட்டு அரங்கு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இந்த பணிகளை வருகிற பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்க வேண்டும். வேலைகள் தரமானதாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது நகரசபை தலைவர் வேணுகோபால் உடன் இருந்தார்.


Next Story