பள்ளி மாணவியின் குடும்பத்திற்கு மந்திரிகள் ஆறுதல்
பலாத்காரம் செய்து கொலையான பள்ளி மாணவியின் குடும்பத்தினரை மந்திரி அஸ்வத்நாராயணா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மண்டியா:
மண்டியா மாவட்டம் மலவள்ளி டவுனில் பள்ளி மாணவி, டியூசன் ஆசிரியரால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாள். இதுதொடர்பாக மாணவி படித்து வந்த டியூசன் ஆசிரியர் காந்தராஜ் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கே.ஆர்.பேட்டை திரிவேணி சங்கமம் மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண், மந்திரி கோபாலய்யா ஆகியோர் மண்டியாவுக்கு வந்திருந்தனர். இதற்கிடையே அவர்கள் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையான பள்ளி மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் 2 மந்திரிகளும், மாணவியின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
அப்போது மந்திரி அஸ்வத் நாராயண் கூறியதாவது, மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது. இது துரதிர்ஷ்டவசமானது. கைதானவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.