பாகிஸ்தான் ஏஜென்ட்டிற்கு ரகசிய தகவல்களை பரிமாறிய வெளியுறவு அமைச்சக ஊழியர் கைது..!
பாகிஸ்தான் ஏஜென்ட்டிற்கு ரகசிய தகவல்களை பரிமாறிய வெளியுறவு அமைச்சக ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
பாகிஸ்தான் பெண் ஏஜென்ட் ஒருவருக்கு வெளியுறவு அமைச்சகத்தின் முக்கிய தகவல்கள், கோப்புகளை பரிமாறிய வெளியுறவு அமைச்சக ஊழியர் பிரவீன் பால் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். கொல்கத்தாவில் வசிக்கும் அஞ்சலி என்ற பெண்ணுக்கு ரகசிய ஆவணங்கள், ஜி20 நாடுகளின் மாநாடு விவரங்களை அனுப்பியதாக வெளியுறவு அமைச்சக ஊழியர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
முக்கிய ஆவணங்களை தனது அலைபேசியில் படம் பிடித்து அனுப்பியதுடன், அவ்வபோது இருவரும் வீடியோ சாட்டிங் செய்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இதேபோன்று வெளியுறவு அமைச்சகத்தில் பணியாற்றக்கூடிய ஓட்டுநர் ஒருவர் வெளியுறவு அமைச்சகத்தின் முக்கிய தகவல்களை பாகிஸ்தான் நாட்டிற்கு பரிமாறியதாக கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.