மருத்துவமனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த லேப் டெக்னீசியன் - அதிர்ச்சி சம்பவம்


மருத்துவமனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த லேப் டெக்னீசியன் - அதிர்ச்சி சம்பவம்
x

மருத்துவமனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த லேப் டெக்னீசியனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கொல்கத்தா,

மேற்குவங்காள மாநிலம் ஹவுரா மாவட்டத்தை சேர்ந்த 12 வயது சிறுமிக்கு கடந்த வாரம் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமியை குடும்பத்தினர் ஹவுரா மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், மருத்துவமனை ஆய்வு கூடத்திற்கு நேற்று மாலை சிறுமி சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த லேப் டெக்னீசியன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், இது குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவேன் என்று சிறுமியை மிரட்டியுள்ளார்.

இதனால் அழுதுகொண்டு ஆய்வு கூடத்தில் இருந்து வெளியே வந்த சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தனர். அப்போது, லேப் டெக்னீசியன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி பெற்றோரிடம் கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த லேப் டெக்னீசியனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story