குழந்தை பிறக்க பரிகாரம் கேட்டு வந்த பெண்ணை மயக்கி பாலியல் பலாத்காரம் செய்த சாமியார் "மிர்ச்சி பாபா" கைது!
மத்திய பிரதேச போலீசார், சாமியார் மிர்ச்சி பாபா என்பவரை கைது செய்தனர்.
போபால்,
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் மகளிர் போலீசார், சாமியார் மிர்ச்சி பாபா என்று அழைக்கப்படும் வைராக்கியானந்த் கிரி என்பவரை கைது செய்தனர்.
இந்த சாமியாரிடம் ஒரு பெண் தனக்கு குழந்தை இல்லை என்று கூறி பரிகாரம் கேட்டு வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த நீரை கொடுத்த அந்த சாமியார் அதன் பின் அவரை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். இப்போது கைதாகி உள்ள அவர், அந்த பெண்ணிடம் இந்த சம்பவத்தை வெளியே தெரிவித்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதனை அடுத்து அந்த பெண் போலீசில் புகார் அளித்தார். அதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
இந்த சாமியார் 2019இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திக் விஜய் சிங்கிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து பிரபலமடைந்தார்.
நேற்று போலீஸிடம் அந்த பெண் புகார் அளித்த நிலையில், நேற்று நள்ளிரவில் சாமியார் மிர்ச்சி பாபாவை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரித்து வருகின்றனர்.