உ.பி.யில் காந்தி சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் - போலீஸ் விசாரணை
உத்தர பிரதேசத்தில் காந்தி சிலையை சேதப்படுத்திய நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ள செதாவரி கிராமத்தில் லக்னோ-பல்லியா நெடுஞ்சாலை அருகே மகாத்கா காந்தியின் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை கடந்த 1996-ம் ஆண்டு உள்ளூர் கிராமவாசிகளால் நிறுவப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த சிலையை நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் சேதப்படுத்தியுள்ளனர். காந்தி சிலையை விரைவில் சீரமைக்க திட்டமிட்டிருந்ததாகவும், தற்போது அந்த சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது கிராம வாசிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிலையை சேதப்படுத்திய நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story