முதல் நாளிலேயே முடங்கியது நாடாளுமன்றம்.. இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு


முதல் நாளிலேயே முடங்கியது நாடாளுமன்றம்.. இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
x

எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடந்து வருகிறது. இந்த தொடர் ஆகஸ்டு மாதம் 12ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் 18 அமர்வுகள் இடம்பெறும் என கூறப்பட்டு உள்ளது. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரைப்போல இந்த தொடரிலும் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

அதேநேரம் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், அக்னிபத் திட்டம், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் ஆகியவற்றின் விலை உயர்வு ஆகிய விவகாரங்களை இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டு இருந்தன. அதன்படி, இன்று நாடாளுமன்றம் கூடியதும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பின. இதனால், அவையில் அமளி ஏற்பட்டது. இதையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் முடங்கியது.


Next Story