குஜராத் தொங்கு பால விபத்து: பராமரிப்பு நிறுவன நிர்வாக இயக்குனர் கோர்ட்டில் சரண்


குஜராத் தொங்கு பால விபத்து: பராமரிப்பு நிறுவன நிர்வாக இயக்குனர் கோர்ட்டில் சரண்
x

கோப்புப்படம்

குஜராத் தொங்கு பால விபத்து தொடர்பான வழக்கில் பராமரிப்பு நிறுவன நிர்வாக இயக்குனர் கோர்ட்டில் சரணடைந்தார்.

ஆமதாபாத்,

குஜராத் மாநிலம் மோர்பியில் மாச்சு நதியின் குறுக்கே அமைந்த தொங்குபாலம் கடந்த அக்டோபர் 30-ந்தேதி அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் 135 பேர் பலியாகினர்.

இந்த பாலத்தை பராமரித்து செயல்படுத்தி வந்த ஒரேவா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ஜெய்சுக் படேலின் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றது.

அவரை கைதுசெய்ய வாரண்டு பிறப்பித்து மோர்பி தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

இந்நிலையில் அந்த கோர்ட்டில் ஜெய்சுக் படேல் நேற்று சரணடைந்தார்.


Next Story