மராட்டியம்: இரு ரெயில்கள் மோதி விபத்து - 50 பேர் காயம்
மராட்டியத்தில் பயணிகள் ரெயிலும், சரக்கு ரெயிலும் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 50 பேர் காயமடைந்தனர்.
மும்பை,
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து பயணிகள் ரெயில் நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜோதாப்பூர் நோக்கி புறப்பட்டது.
அந்த ரெயில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் மராட்டிய மாநிலத்தின் கொண்டியா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் ரெயிலின் 3 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ரெயில்வே போலீசார், மீட்புக்குழுவினர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை. சிக்னல் கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Related Tags :
Next Story