உடல் ரீதியாக தொல்லை: ரெகானா பாத்திமா மீது தாயார் பரபரப்பு புகார்


உடல் ரீதியாக தொல்லை: ரெகானா பாத்திமா மீது தாயார் பரபரப்பு புகார்
x

தனது மகள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் என்னை கொடுமை செய்து வருகிறார் என சமூக ஆர்வலர் ரெகனா பாத்திமா மீது தாயார் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவனந்தபுரம்,

சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் தான் கேரளாவை சேர்ந்த ரெகானா பாத்திமா. பெண்கள் சபரிமலை கோவிலுக்கு செல்லக்கூடாது என கூறிவந்த நிலையில், ஆண்களை காட்டிலும் பெண்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை, அனைவரும் சபரிமலைக்கு செல்லலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அவ்வாறு உத்தரவிட்டதை அடுத்து, இரண்டு பெண்கள் சபரிமலைக்கு சென்றனர்.

அவ்வாறு சென்ற பெண்களில் ரெகானாவும் ஒருவர். இதற்கு ஒரு படி மேலாக தான் பெற்ற குழந்தைகளுக்கு பாலியல் கல்வியை கற்றுக் கொடுக்கிறேன் என, தனது குழந்தைகளையே தன் அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைய வைத்து அதனையும் இணையத்தில் வெளியிட்டார். இவர் இவ்வாறு செய்தது பாலியல் சீண்டல் என பல தரப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தது. அதன்பின்பு மாட்டு இறைச்சி குறித்து சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். இதற்காக அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு அடுத்தடுத்து பல சர்ச்சைகளுக்குள் சிக்கிய ரெஹான தற்பொழுது புதிதாக ஓர் வழக்கில் சிக்கியுள்ளார். ரெகானா பாத்திமாவின் தாயார் பியாரி ஆலப்புழா வடக்கு போலீசில் நேற்று ஒரு புகார் கொடுத்தார். தனது மகள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் என்னை கொடுமை செய்து வருகிறார். இதை தாங்க முடியாமல் நான் இரண்டு மாத காலமாக தனது உறவினர் வீட்டில் தங்கி இருக்கிறேன். ஆனால் தற்பொழுது அவர்களையும் ரெகானா மிரட்டி வருகிறார். இது குறித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசாரிடம் அவரது தாயார் புகார் அளித்துள்ளார். போலீசார் இந்த புகார் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ரெகானா பாத்திமாவை போலீஸ் நிலையம் வரவழைத்தனர். பின்னர் அவரிடம் தாயாருக்கு இடையூறு செய்யக்கூடாது என எச்சரித்ததோடு இது தொடர்பாக அவரிடம் எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர். பெண் சமூக ஆர்வலர் மீது அவரது தாயாரே புகார் அளித்தது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story