மோட்டார் சைக்கிள்-கார் மோதல்; வாலிபர் சாவு


மோட்டார் சைக்கிள்-கார் மோதல்; வாலிபர் சாவு
x
தினத்தந்தி 20 Oct 2022 12:15 AM IST (Updated: 20 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோலார் தங்கவயலில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் ஒருவர் உயிரிழந்தார்.

கோலார் தங்கவயல்:

கோலார் மாவட்டம் மாலூர் டவுன் ஆதர்ஷ் நகரை சேர்ந்தவர் சந்தீப் (வயது 24). இவரது நண்பர் அலவள்ளி கிராமத்தை சேர்ந்த பரத். நேற்று இரண்டு பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று வேலை பார்த்துவிட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். மாலூர் மெயின் ரோட்டில் உள்ள தேக்கல் கிராசில் வந்தபோது, எதிரே வந்த கார் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தீப், பரத் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகேயுள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்தீப் இறந்தார். பரத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story