ஏரிக்குள் பாய்ந்த மோட்டார் சைக்கிள்; கர்ப்பிணி சாவு


ஏரிக்குள் பாய்ந்த மோட்டார் சைக்கிள்; கர்ப்பிணி சாவு
x
தினத்தந்தி 14 Oct 2022 12:15 AM IST (Updated: 14 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஏரிக்குள் பாய்ந்த மோட்டார் சைக்கிள் சென்ற கர்ப்பிணி பெண் உயிரிழந்தார்.

மைசூரு:

மைசூரு அருகே தேவனூர் கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணா மூர்த்தி (வயது 28). இவரது மனைவி யமுனா(22). இந்த நிலையில் நேற்று மதியம் தட்சிணா மூர்த்தி, மனைவி யமுனாவை மோட்டார் சைக்கிள் பின்னால் அமர வைத்து வெளியே அழைத்து சென்றார்.

நஞ்சன்கூடு தாலுகா கூகலூர் கிராம அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் தட்சிணா மூர்த்தியின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது. பின்னர் மோட்டார் சைக்கிள், சாலை ஓரத்தில் இருந்த ஏரிக்குள் பாய்ந்தது. இதில் யமுனா ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். தட்சிணா மூர்த்தி படுகாயம் அடைந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக மைசூரு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து பற்றி தகவல் அறிந்த நஞ்சன்கூடு புறநகர் போலீசார் விரைந்து வந்து யமுனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story