கொரோனாவில் இருந்து குணம் அடைந்தார் மத்திய பிரதேச கவர்னர்


கொரோனாவில் இருந்து குணம் அடைந்தார் மத்திய பிரதேச கவர்னர்
x
தினத்தந்தி 29 Aug 2022 5:36 PM IST (Updated: 29 Aug 2022 5:36 PM IST)
t-max-icont-min-icon

போபால்,

மத்திய பிரதேச கவர்னர் மங்கு பாய் சி படேல்(வயது 78) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, கடந்த 20 ஆம் தேதி போபாலில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனாவுக்கு கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக சிகிசை பெற்று வந்த கவர்னர் மங்கு பாய் சி படேல், நோய் தொற்றில் இருந்து குணம் அட்டைந்தார்.

இதையடுத்து, இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நட்டார். முன்னதாக, கடந்த 25 ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்ற மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான், கவர்னரின் உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.


Next Story