தட்சிண கன்னடா கலெக்டராக எம்.ஆர்.ரவிக்குமார் பதவியேற்பு
தட்சிண கன்னடா கலெக்டராக எம்.ஆர்.ரவிக்குமார் பதவியேற்று கொண்டார்.
மங்களூரு;
தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டராக கே.வி.ராஜேந்திரா பணியாற்றி வந்தார். இதற்கிடையே அவர், கடந்த மாதம்(அக்டோபர்) 21-ந்தேதி மைசூரு மாவட்ட கலெக்டராக பணி இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டராக ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.ஆர்.ரவிக்குமாரை நியமித்து அரசு உத்தரவிட்டது.
இவர், ராஜீவ் காந்தி சுகாதாரம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தில் பதிவாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டராக எம்.ஆர்.ரவிக்குமார் பதவியேற்று கொண்டார்.
அவரிடம், தற்காலிக கலெக்டராக பணியாற்றி வந்த மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி குமாரா பொறுப்புகளை ஒப்படைத்து வாழ்த்து தெரிவித்தார்.
Next Story