முக்கா சுங்கச்சாவடி விரைவில் அகற்றப்படும்


முக்கா சுங்கச்சாவடி விரைவில் அகற்றப்படும்
x

முக்கா சுங்கச்சாவடி விரைவில் அகற்றப்படும் என்று நளின் குமார் கட்டீல் எம்.பி தெரிவித்துள்ளார்.

மங்களூரு:-

மங்களூரு-உடுப்பி தேசிய நெடுஞ்சாலையில் சூரத்கல், முக்கா ஆகிய 2 இடங்களில் சுங்கச்சாவடி அடுத்தடுத்து அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். மேலும், ஒரு சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்று இரவு, பகலாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் தட்சிண கன்னடா தொகுதி எம்.பி.யும், மாநில பா.ஜனதா தலைவருமான நளின்குமார் கட்டீல் நேற்று தனது டுவிட்டர் பதிவில், நீண்ட கால போராட்டத்துக்கு பிறகு முக்கா சுங்கச்சாவடி அகற்றப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றார். இதுபற்றி போராட்டக்காரர்கள் கூறுகையில், சுங்கச்சாவடி அகற்றப்படும் என்று பலமுறை கூறினார்கள். ஆனால் இதுவரை அகற்றப்படவில்லை. இதுபோன்ற பேச்சை நாங்கள் நம்பமாட்டோம் என்றனர்.


Next Story