மும்பை: ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கி புற்றுநோய் பாதித்த சிறுவன் உயிரிழப்பு - 4 பேர் படுகாயம்


மும்பை: ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கி புற்றுநோய் பாதித்த சிறுவன் உயிரிழப்பு - 4 பேர் படுகாயம்
x

முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்ற போது மற்றொரு வாகனம் ஆம்புலன்ஸ் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

புனே,

மராட்டிய மாநிலம் சாங்கிலியை சேர்ந்த சிறுவன் கிரண்(வயது14). புற்றுநோய் பாதிப்பு இருந்ததால் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள டாடா ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டான். ஆம்புலன்சில் சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இருந்தனர்.

மும்பை-சத்தாரா நெடுஞ்சாலை கட்ரஜ் குகை அருகே ஆம்புலன்சு வந்தபோது முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றது. அப்போது மற்றொரு வாகனம் ஆம்புலன்ஸ் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆம்புலன்சில் இருந்த சிறுவன் கிரண் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.

தகவல் அறிந்த பாரதிவித்யா பீட் போலீசார் அங்கு சென்று அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் புற்றுநோய் பாதித்த சிறுவன் கிரண் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். காயம் அடைந்த மற்ற 4 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story