தெருவில் சிறுநீர் கழிக்கக்கூடாது என்று கூறி தடுத்த கான்ஸ்டபிளை தாக்கிய நபர் கைது


தெருவில் சிறுநீர் கழிக்கக்கூடாது என்று கூறி தடுத்த கான்ஸ்டபிளை தாக்கிய நபர் கைது
x

மும்பையில் தெருவில் சிறுநீர் கழிக்கக்கூடாது என்று கூறி தடுத்த கான்ஸ்டபிளை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பையின் கண்டிவாலியில் தெருவில் சிறுநீர் கழிக்கக் கூடாது என்று கூறி தடுத்த கான்ஸ்டபிளை கத்தியால் தாக்கிய காய்கறி வியாபாரியை போலீசார் நேற்று கைது செய்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர் ராம் கோண்டே என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மும்பையின் கண்டிவாலி பகுதியில் மக்கள் நடமாட்டம் இருந்த தெருவில் சிறுநீர் கழித்தார். அப்போது உதய் கடம் என்ற கான்ஸ்டபிள் ஒருவர் சாலையில் சிறுநீர் கழிக்கக் கூடாது மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கோண்டே கான்ஸ்டபிளை கத்தியால் தாக்கினார். இதனால் காவலரின் கையில் காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் கோண்டே மீது எப்ஐஆர் பதிவு செய்த செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்.


Next Story