தாயை கழுத்தறுத்து கொன்ற மகன்..! பின் ரெயிலில் பாய முற்பட்டபோது காப்பாற்றிய ரெயில்வே அதிகாரி


தாயை கழுத்தறுத்து கொன்ற மகன்..! பின் ரெயிலில் பாய முற்பட்டபோது காப்பாற்றிய ரெயில்வே அதிகாரி
x

image credit: ndtv.com

தினத்தந்தி 10 July 2022 8:13 AM IST (Updated: 10 July 2022 8:23 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் தாயை கழுத்தறுத்து கொன்ற நபர், பின்னர் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்ய முற்பட்டபோது, ரெயில்வே அதிகாரியால் காப்பாற்றப்பட்டார்.

மும்பை,

மும்பையின் முலுண்டின் புறநகர் குடியிருப்பை சேர்ந்த 21 வயது நபர் ஜெயேஷ் பஞ்சால். இவர் நேற்று சொத்துப்பிரச்சனையின் காரணமாக தனது 46 வயதான தாயை

கூர்மையான ஆயுதத்தை கொண்டு கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

பின்னர் தானும் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் முலுண்ட் ரெயில் நிலையத்திற்கு வந்த அவர், அங்கு வந்துகொண்டிருந்த ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

அப்போது அவரை நோட்டமிட்ட ரெயில்வே அதிகாரி ஒருவர், துரிதமுடன் செயல்பட்டு காப்பாற்றினார். இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்ய முற்பட்ட நபர் தனது தாயை கொலை செய்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story