மும்பை: 2 வந்தே பாரத் ரெயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி


மும்பை: 2 வந்தே பாரத் ரெயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
x

2 வந்தே பாரத் ரெயில்களை பிரதமர் மோடி மும்பையில் நடைபெற்ற விழாவில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார் .

மும்பை,

நாடு முழுவதும் 8 அதிவேக வந்தே பாரத் ரெயில்கள் ஓடுகின்றன. இதில் முதல் ரெயில் சேவை தலைநகர் டெல்லி- வாரணாசி இடையே கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. இந்தநிலையில் புதிதாக 2 வந்தே பாரத் ரெயில்களை பிரதமர் மோடி மும்பையில் நடைபெற்ற விழாவில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார் .

இந்த ரெயில்கள் மராட்டிய மாநிலத்துக்குள்ளே இயக்கப்படுகிறது. அதாவது மாநில தலைநகர் மும்பையில் இருந்து புனித ஸ்தலமாக கருதப்படும் ஷீரடிக்கும் (339 கி.மீ), மும்பையில் இருந்து சோலாப்பூருக்கும் (452 கி.மீ.) இயக்கப்பட உள்ளது.


Related Tags :
Next Story